ADDED : ஜன 20, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தரமான, சான்றளிக்கப்பட்ட வெங்காய விதைகளை மட்டுமே விற்க வேண்டும், என, ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
தை பருவத்தில் வெங்காயம் சாகுபடி மேற்கொள்ள காங்-கேயம், குண்டடம் பகுதி விவசாயிகள், தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தரமான விதைகளை விவசாயிகளுக்கு கிடைக்கும்-படி, விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை விதை ஆய்வு பிரிவு நடவடிக்கை மேற்கொள்கிறது. தரமான விதையா என விதை விற்பனை நிலையத்தில் கவனித்து வாங்க வேண்டும். உரிமம் பெறாத விதைகளை விற்பனை நிலையங்-களில் வாங்கி விற்கக்கூடாது. விவசாயிகளின் தேவையை பயன்-படுத்தி, தரமற்ற, உரிய விபரமற்ற விதைகளை விற்பனை செய்-பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்-துள்ளார்.
