தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கால்நடை சந்தைக்கு 300 மாடுகளே வரத்து

கால்நடை சந்தைக்கு 300 மாடுகளே வரத்து

கால்நடை சந்தைக்கு 300 மாடுகளே வரத்து


ADDED : மே 22, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தை நேற்று நடந்தது. தமிழகத்தில் சில மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் இருந்து மட்டும் வியாபாரிகள், விவசாயிகள் வந்திருந்தனர். 6,000 முதல், 23,000 ரூபாய் மதிப்பில், 40 கன்றுகள், 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 100 எருமை மாடுகள், 23,000 முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 100 பசு மாடுகள், 65,000 ரூபாய்க்கு உயர்ந்த நிலையில் முற்றிலும் கலப்பின மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

வியாபாரிகள் கூறியதாவது:கடந்த மூன்று மாதமாக கடும் வெயிலுடன், மழை இல்லாததால் பசுந்தீவனம், உலர் தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மாட்டுக்கு தேவையான தண்ணீர் இல்லாததால், விற்க வருகின்றனர். பசுந்தீவனம், உலர் தீவனம், கலப்பு தீவனம், புண்ணாக்கு, பருத்தி கொட்டை போன்றவற்றின் விலை கிலோவுக்கு, 20 முதல், 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. எனவே மாடுகளை பராமரிக்க இயலாது என்பதால் மாடுகளை வாங்க விவசாயிகள், வியாபாரிகள் குறைவாக வந்துள்ளனர். வழக்கமாக சந்தைக்கு, 500 முதல், 800 மாடுகள் வரை வரத்தாகி, 90 சதவீதம் விற்பனையாகும். நேற்று, 220 மாடுகள் வரை மட்டுமே விற்பனையானது. இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us