ADDED : மே 06, 2026 04:20 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தின் எட்டு சட்டசபை தொகுதிகளில், ஒரு பெண் மட்டுமே எம்.எல்.ஏ.,வாக உருவெடுத்துள்ளார்.
ஈரோடு
மாவட்டத்தில் சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டத்தில், 9,11,778
பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது ஆண்களை விட, 64,581 அதிகம். நடந்த
முடிந்த தேர்தலில், பெண் வாக்காளர்கள், 8,17,226 பேர்
ஓட்டளித்துள்ளனர். அதாவது ஆண்களை விட, 50,028 பெண்கள் ஓட்டு
போட்டுள்ளனர்.
அதேசமயம் மாவட்டத்தின் எட்டு தொகுதிகளில், 18
பெண் வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டனர். இதில் பவானிசாகர்
தொகுதியில் போட்டியிட்ட த.வெ.க.,வின் தமிழ்செல்வி மட்டுமே
எம்.எல்.ஏ., ஆகியுள்ளார்.
கடந்த, 2021 தேர்தலில் பா.ஜ., சார்பில்
மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,வாக சரஸ்வதி மட்டுமே தேர்வானார். தொடர்ந்து
இந்த தேர்தலிலும், மாவட்டத்துக்கு ஒரே ஒரு பெண் எம்.எல்.ஏ., மட்டுமே
கிடைத்துள்ளார்.
