ஆழ்துளை கிணறு திறப்பு: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ஆழ்துளை கிணறு திறப்பு: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
ADDED : மார் 19, 2026 04:27 AM

சென்னிமலை: சென்னிமலை யூனியன், முகாசிபிடாரியூர் ஊராட்சி, குமராபுரி அரசு நடுநிலைப் பள்ளியில், குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
குடிநீர் தேவையை உணர்ந்து, ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான, 1 லட்சம் ரூபாயை, முகாசிப்பிடாரியூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சதீஷ் என்ற சுப்பிரமணியம் நன்கொடையாக வழங்கினார். மேலும், தண்ணீரை இறைப்பதற்கான மோட்டார் மற்றும் இதர உதிரிபாகங்களுக்கான செலவு தொகையை குமரா-புரி ராசி கொளந்தசாமி, பள்ளி முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து வழங்கினர்.
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, நேற்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சென்னிமலை வட்டார கல்வி அலுவலர் பழனிசாமி, மோட்டார் சுவிட்சை இயக்கி தண்-ணீரின் பயன்பாட்டை முறைப்படி தொடங்கி வைத்தார். நீண்ட நாட்களாக நிலவி வந்த தண்ணீர் பிரச்னைக்கு, ஊர் மக்களும் முன்னாள் மாணவர்களும் இணைந்து நிரந்தர தீர்வு கண்டிருப்பது பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்-தியுள்ளது.
