/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : ஜூன் 01, 2025 01:43 AM
திருப்பூர், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, உயர்கல்விக்கு வழிகாட்டும் கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 'நான் முதல்வன்' திட்டம் வாயிலாக, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டி மையம் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர் வசதிக்காக, கலெக்டர் அலுவலக வளாகத்தின், 7வது தளத்தில், 705ம் எண் அறையில், உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
தேவைப்படுவோர், நேரிலோ, 63826 15181, 0421 2971198 என்ற எண்ணிலோ, காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை தொடர்புகொள்ளலாம்.
* ஈரோடு மாவட்டம் கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பரும்பு (கிலோ), குண்டு உளுந்து, பச்சை பயிர், பாசிப்பருப்பு, மல்லி, என தலா 120 ரூபாய்க்கும், கொள்ளு, 70, வெந்தயம், 100, பொட்டுக்கடலை, 110, சீரகம், 360, தட்டைபயிர், 110, வரமிளகாய், 160, கருப்பு சுண்டல், 90, வெள்ளை சுண்டல், 100, புளி, 160 முதல், 180 ரூபாய் வரையும், பூண்டு, 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரையும் விற்பனையானது.
* சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 1,004 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 100.59 முதல், 160.09 ரூபாய்; சிவப்பு ரகம், 93.72 முதல், 137.60 ரூபாய்; வெள்ளை ரகம், 109.60 முதல், 124.90 ரூபாய் வரை, 74,988 கிலோ எள், 87.௬௦ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. சுற்று வட்டார பகுதி விவசாயிகள், 4,268 மூட்டைகளில், ௨ லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 200.10 ரூபாய் முதல் 214.56 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 52 ரூபாய் முதல் 194.89 ரூபாய் வரை விலை போனது. ௪ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 2,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,300 முதல், 1,420 ரூபாய் வரை விற்பனையானது. உருண்டை வெல்லம், 2,600 மூட்டை வரத்தாகி, ஒரு மூட்டை, 1,350 முதல், 1,450 ரூபாய்; அச்சு வெல்லம், 250 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,400 முதல், 1,460 ரூபாய் வரை விலை போனது. கடந்த வாரத்தை விட நாட்டு சர்க்கரை, வெல்லம் வரத்து குறைந்தது. நாட்டு சர்க்கரை மூட்டைக்கு, 30 ரூபாய் விலை சரிந்தது.
* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 29,291 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ, 40.20 முதல், 6௭ ரூபாய் வரை, 11,763 கிலோ தேங்காய், 6,௭௧ லட்சம் ரூபாய்க்கு விலை போனது.