ADDED : மே 04, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து, வாய்க்கால் பாசனத்துக்கு கடந்த மாதம், 9ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மார்ச் மாத இறுதியில், அணை பகுதியில் மழை கொட்டியதால் ஏப்., 4ம் தேதி முதல் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்பட்டது. மீண்டும் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதன்படி கடந்த, ௨ம் தேதி முதல் வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மூன்று வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படும். நேற்று அணை நீர்மட்டம், 25.23 அடியாக இருந்தது.