/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாய்க்காலில் குளித்த ஆப்பரேட்டர் பலி
/
வாய்க்காலில் குளித்த ஆப்பரேட்டர் பலி
ADDED : நவ 16, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:சேலம் மாவட்டம் சித்துார், மாக்கல்காட்டை சேர்ந்தவர் வெங்கடேசன், 36; அரச்சலுார் அருகே நாச்சிவலசில் மூர்த்தி என்பவரிடம் ஜே.சி.பி., ஆப்பரேட்டாக பணிபுரிந்தார். அரச்சலுார் அருகே சில்லாங்காட்டுவலசில் எல்.பி.பி., வாய்க்காலில் வெங்கடேசன், நேற்று முன்தினம் மாலை குளித்தார்.
அப்போது தண்ணீரில் மூழ்கினார். சென்னிமலை அருகே சேமலைப்பாளையத்தில் மிதந்த உடலை, சென்னிமலை தீயணைப்பு துறையினர் நேற்று மீட்டனர். வாய்க்காலில் மூழ்கி பலியான வெங்கடேசனுக்கு மனைவி, ஒரு மகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

