/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குவாரி அமைக்க எதிர்ப்பு; மக்கள் எச்சரிக்கை
/
குவாரி அமைக்க எதிர்ப்பு; மக்கள் எச்சரிக்கை
ADDED : நவ 22, 2025 02:17 AM
தாராபுரம், தாராபுரம்-பழனி சாலையில், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட எல்லை பகுதியில், மணக்கடவு கிராமத்தை சேர்ந்த பச்சாபாளையம் உள்ளது. இங்கு, 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சிறு குன்றை, சில தினங்களுக்கு முன் கனிம வளத்துறையினர் ஆய்வு செய்து, ஏலம் விட முடிவெடுத்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், இந்து முன்னணி கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில், தாராபுரம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று காலை திரண்டனர். ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜாவிடம், கல் குவாரி அமைக்கப்பட்டால், சுற்றுச்சூழல் மாசுபட்டு, நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் என்று விளக்கினர்.
போராட்ட அறிவிப்பு
இதனிடையே இந்து முன்னணியினர் மனு அளித்தனர். அதன் விபரம்: கல் குவாரி அமைக்கப்படும் முயற்சியை நிறுத்த வேண்டும். இல்லையேல் மக்களுடன் சேர்ந்து இந்து முன்னணி தொடர் போராட்டங்களில் ஈடுபடும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. திருப்பூர் கலெக்டருக்கு தெரிவிப்பதாக, ஆர்.டி.ஓ., கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். கடந்த ஆண்டு டிசம்பரில் இது தொடர்பாக நடந்த கருத்து கேட்புக்கூட்டத்திலும், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

