தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காலி மது பாட்டில் திரும்ப பெறுதல் டிச.,2 வரை நிறுத்தி வைக்க உத்தரவு

காலி மது பாட்டில் திரும்ப பெறுதல் டிச.,2 வரை நிறுத்தி வைக்க உத்தரவு

காலி மது பாட்டில் திரும்ப பெறுதல் டிச.,2 வரை நிறுத்தி வைக்க உத்தரவு


ADDED : நவ 29, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு, காலி மது பாட்டில்களை திரும்பபெற டாஸ்மாக் ஊழியர் நிர்ப்பந்தம் செய்வதை கண்டித்து, ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் அதற்கான கருவி, ஸ்டிக்கர்களை ஒப்படைப்பது, டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, கடைக்கான பணியை மேற்கொள்ளாமல் நேற்று பணி புறக்கணிப்பு செய்வதாக, ஈரோடு மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் - சி.ஐ.டி.யு., அறிவித்திருந்தது. இதற்கு பிற சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.

இந்நிலையில் நேற்று தொழிலாளர் துறை அதிகாரிகள், டாஸ்மாக் அதிகாரிகள் ஆகியோர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து முத்தரப்பு கூட்டம் நடத்தினர்.

ஏற்கனவே ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், காலி மது பாட்டில் திரும்ப பெறும் பணியை நிர்வாகம் திணிப்பதை கைவிட வேண்டும். வேறு அமைப்பு, நிர்வாகம் மூலம் பெற வலியுறுத்தினர்.

இதை ஏற்ற தொழிலாளர் துறை அதிகாரிகள் டிச.,2ல் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதுவரை காலி பாட்டில் திரும்ப பெறுவதை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர். இதனால் நேற்று அறிவிக்கப்பட்டிருந்த போராட்டமும் ஒத்தி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us