ADDED : ஜூன் 19, 2026 05:25 AM
ஈரோடு:ஈரோடு
வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வட்டார
வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம், விவசாயிகளுக்கு வேளாண்மை
மற்றும் அங்கக இயற்கை வேளாண் தொழில் நுட்ப பயிற்சி நடந்தது.
ஈரோடு வட்டாரம், சத்திரம்புதுாரில் நடந்த
பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குனர் சசிகலா தலைமை வகித்தார். வேளாண்
அறிவியல் நிலையம் கோபி விஞ்ஞானி மு.சிவா, பசுந்தாள் பயிர்களை நடவு
செய்து, மண்ணின் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்துதல், ரசாயன
உரங்களின் பயன்பாடுகளை குறைத்து அங்கக உர பயன்பாட்டை
மேம்படுத்துதல், உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளை
பயன்படுத்துதல், மண் வளம் காத்தல் குறித்து பேசினார்.
வேளாண்
அலுவலர் நிவேதா, வட்டார தொழில் நுட்ப மேலாளர் கிருத்திகா, உதவி வட்டார
தொழில் நுட்ப மேலாளர் செங்கோட்டையன் ஆகியோர் மானிய திட்டங்கள்,
அட்மா திட்டங்களின் செயல்பாடு, உழவன் செயலி மூலம் இடுபொருட்கள் பதிவு
செய்யும் முறை குறித்து விளக்கினர். 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்
பயன் பெற்றனர்.
