நிலக்கடலை அறுவடை நடக்கும் நிலத்தில் செம்மண் கொள்ளை
நிலக்கடலை அறுவடை நடக்கும் நிலத்தில் செம்மண் கொள்ளை
ADDED : நவ 29, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி
அருகே உள்ள தச்சு பெருமாள் பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 49;
இவருக்கு சொந்தமான விவசாய நிலம் புங்கம்பள்ளி அருகே உள்ளது.
மானாவாரி நிலத்தில் நிலக்கடலை சாகுபடி செய்த நிலையில் அறுவடை நடந்து
வருகிறது. அறுவடை பணிக்காக ஆட்களுடன் பழனிச்சாமி நேற்று சென்றார்.
விவசாய நிலத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் செம்மண்
திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து
புன்செய்புளியம்பட்டி போலீசில் புகாரளித்தார். நிலக்கடலை அறுவடை
பணி நடந்து வந்த நிலத்தில், நள்ளிரவில் பொக்லைன் இயந்திரம் மூலம், 10
லோடுக்கு மேல் செம்மண் திருடப்பட்டிருக்கலாம் என்று
தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
