தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/த.பள்ளி-அ.கோட்டை பாசனத்தில் நெல் அறுவடை பணி துவக்கம்

த.பள்ளி-அ.கோட்டை பாசனத்தில் நெல் அறுவடை பணி துவக்கம்

த.பள்ளி-அ.கோட்டை பாசனத்தில் நெல் அறுவடை பணி துவக்கம்


ADDED : மார் 11, 2026 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 07:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி:பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்-கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றனர்.

கடந்த, 2025 அக்., 24 முதல், பிப்., 20வரை, 120 நாட்களுக்கு இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் இரு பாசனங்களிலும், விவசாயிகள் கோ-50, ஏ.எஸ்., 16, ஐ.ஆர்., 20, ஏ.டி.டீ., 16 உள்ளிட்ட ரக நெல் சாகுபடி செய்தனர். ஓரிரு நாட்களாக அறுவடை துவங்கியுள்ளது. ஏக்கருக்கு சராசரி-யாக, 2,600 முதல், 3,000 கிலோ நெல் மகசூல் கிடைப்பதாக, விவசாயிகள்தெரிவிக்கின்றனர்.

அதேசமயம் முருகன்புதுார், நஞ்சகவுண்டன்பாளையம், காசி-பாளையம் உள்ளிட்ட பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, டிராக்டர் போன்ற வாகனங்களில், கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us