/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயன் பாசனத்தில் நெல் நடவுப்பணி தீவிரம்
/
காளிங்கராயன் பாசனத்தில் நெல் நடவுப்பணி தீவிரம்
ADDED : ஜன 25, 2025 02:01 AM
ஈரோடு: காளிங்கராயன் வாய்க் கால் பாசனப்பகுதியில் தற்போது இரண்டாம் போக நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்-டுள்ளனர்.
பவானிசாகர் அணை யில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்-படும் தண்ணீர், காளிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் இருந்து காளிங்கராயன் வாய்க்காலில் திறக்கப்படும். இந்த தண்ணீர் மூலம், 15,540 ஏக்கர் பாசன நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இப்பாசன பகுதியில், நெல், மஞ்சள், கரும்பு, வாழை, மரவள்ளி கிழங்கு போன்றவை சாகுபடி செய்கின்றனர்.தற்போது இரண்டாம் போகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்-றனர். குறிப்பாக ஈரோட்டை ஒட்டிய கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம், வைராபாளையம், பி.பி.அக்ரஹாரம், ஆர்.என்.புதுார், சூரியம்பாளையம், பவானி சாலைப்பகுதிகளில் உழவு, நாற்று நடவு நடந்து வருகிறது. இப்பகுதிகலில் குறுகிய கால நெற்பயிர்களான பி.பி.டி., பொன்னி ரகங்களை நடவு செய்-கின்றனர். தவிர பாசூர் பகுதியில், 2,000ம் ஏக்கருக்கு மேல் கரும்பு, மூலக்கரை, வெண்டிபாளையம் பகுதியில் வாழை சாகு-படி செய்து வருகின்றனர். தற்போது வாய்க்காலில் தண்ணீர் வரு-வதுடன், பகலில் வெயிலும் அடிப்பதால் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

