ADDED : நவ 21, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, காளிங்கராயன் பாசனப்பகுதியில் நெல் அறுவடை துவங்கியதால், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் (டி.பி.சி.,), வைராபாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது. காளிங்கராயன் பாசனத்தில், 15 நாட்களாக நெல் அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு சன்ன ரகம் கிலோ, 25.45 ரூபாய், பொது மோட்டா ரகம் கிலோ, 25 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுபற்றி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது: இங்கு தினமும், 1,000 மூட்டை என்ற கணக்கில் நெல் கொள்முதலாகிறது. கடந்தாண்டுகளின் அதிகமாக அறுவடை நடந்தபோது, கணபதிபாளையம் பகுதியில் மேலும் ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. தற்போது அறுவடை துவங்கி உள்ளதால், தேவை அடிப்படையில் பரிசீலிக்கப்படும். இவ்வாறு கூறினர்.

