ADDED : மே 10, 2026 05:12 AM
அ நிறம் | அளவு
கொடுமுடி:கொடுமுடி நஞ்சை கொளாநல்லி தேவம்பாளையம் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் முத்துக்குமார், 31, பெயிண்டர். திருமணமாகி ஆறு மாதங்களாகிறது.
டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில் கொம்பனைபுதுார் அருகே, நேற்று முன் தினம் மாலை சென்றார். கோசகாட்டூர் பழைய காலனி சாலை வளைவில், சாலையோர கம்பத்தில் மோதினார். இதில் தலையில் பலத்த காயமடைந்ததில் இறந்தார்.
கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
