ADDED : அக் 25, 2026 07:11 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகே பைக்கில் சென்ற பெயின்டர் விபத்தில் பலியானார்.
பவானிசாகர் இலங்கை தமிழர் புதிய முகாமை சேர்ந்தவர் பெயின்டர் சரத், 21. நேற்று மாலை யமஹா ஆர்.ஒன்.5., பைக்கில் உதயமரத்து மேடு பகுதியில் உள்ள, டாஸ்மாக் கடையில் மது அருந்தி விட்டு, வெள்ளியம் பாளையம் வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது தடுமாறி பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்திற்கு மகேஷ்வரி என்ற மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.
