தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நுாற்பாலையில் திருடிய பெயின்டர் சிறையிலடைப்பு

நுாற்பாலையில் திருடிய பெயின்டர் சிறையிலடைப்பு

நுாற்பாலையில் திருடிய பெயின்டர் சிறையிலடைப்பு


ADDED : மே 04, 2026 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2026 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி:புன்செய் புளியம்பட்டியில் காந்தி நகர் தோட்ட சாலை பகுதியில், விஷ்ணு டெக்ஸ்டைல்ஸ் நூற்பாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சூப்பர்வைசராக சிவராஜ் பணிபுரிகிறார்.

நேற்று காலை பணியில் இருந்த போது மொபட்டில் வந்த நபர், நுாற்பாலை முன்பாக வைத்திருந்த காப்பர் பிளேட்டுகளை மொபட்டில் ஏற்றிக்கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் புன்செய் புளியம்பட்டியை சேர்ந்த சுரேஷ், 32, பெயின்டர் என்பது தெரிந்தது.

நிறுவனத்துக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தவர், கம்ப்ரஸர் அறைக்குள் இருந்த நான்கரை கிலோ காப்பர் பிளேட்டை வெட்டி எடுத்து அருகில் இருந்த காட்டுக்குள் ஒளித்து வைத்துள்ளார். மொபட்டில் நேற்று காலை எடுக்க வந்தபோது சிக்கி விட்டது தெரிய வந்தது.

சுரேஷை கைது செய்து, நான்கரை கிலோ காப்பர் பிளேட் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us