ADDED : ஏப் 27, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: காஷ்மீரில், 26 பேர் தீவிரவாதிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டவர் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாகிஸ்தான் நாட்டவர் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில், போலீசார் நடத்திய கணக்கெடுப்பில், சுற்றுலா மற்றும் மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் நாட்டவர் யாரும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

