/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குடிநீர் கேட்டு பஞ்., அலுவலகம் முற்றுகை
/
குடிநீர் கேட்டு பஞ்., அலுவலகம் முற்றுகை
ADDED : ஆக 26, 2025 01:22 AM
பவானிசாகர், பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்., வெள்ளாளபாளையம் அண்ணா நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு பவானிசாகர் அணையில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தில் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் சீரான குடிநீர் வழங்க கோரி, பஞ்., அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். பஞ்.,செயலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பேசி விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறவே, மக்கள் கலைந்து சென்றனர்.

