ADDED : டிச 18, 2025 05:18 AM
தாராபுரம்: தாராபுரம் அருகே, 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் மினியாகம் செய்யப்படுவதால் அதிருப்தி அடைந்த மக்கள் பஞ்சா-யத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பஞ்சாயத்து, 13 வது வார்டு, அண்ணா நகரில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு அமராவதி கூட்டு குடிநீர் திட்டத்தில், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறதுகடந்த ஆறு மாதமாக, 10 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வினியோகிக்கின்றனர்.பஞ்சாயத்து அலுவலகத்தை நாடியும், எவ்வித பயனும் இல்லாததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், நேற்று மாலை, பஞ்சாயத்து அலுவலகத்தை முற்று-கையிட்டனர். மேலும், அங்கிருந்த அதிகாரிகளிடம், மக்கள் வாக்-குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்-கப்படும் என, அதிகாரிகள் கூறியதை அடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.
