ADDED : மார் 03, 2024 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்;அந்தியூர்
அருகே பச்சாம்பாளையம் பஞ்., சித்திரெட்டி பாளையத்தில், பகுதி நேர
ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை
வைத்திருந்தனர்.
அதன்படி, நேற்று பவானி தொடக்க வேளாண்மை
உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம், சித்திரெட்டி
பாளையத்தில், பகுதி நேர ரேஷன் கடையை அந்தியூர் எம்.எல்.ஏ.
வெங்கடாச்சலம் திறந்து வைத்தார். அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.

