/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்சி கொடி, துண்டு விற்பனைக்கு வருகை
/
கட்சி கொடி, துண்டு விற்பனைக்கு வருகை
ADDED : ஜன 11, 2025 02:37 AM
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் துவங்கியதால், ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை, டி.வி.எஸ்., வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடிகள், மப்ளர்கள், கரை வேட்டி, துண்டு போன்றவற்றை விற்பனைக்கு வைக்க துவங்கினர்.
இதுபற்றி கடைக்காரர்கள் கூறியதாவது: தேர்தலின்போது அனைத்து கட்சிகள் சார்ந்த கரை வேட்டி, துண்டு, மப்ளர், விதவி-தமான வடிவ துண்டுகள், சட்டைகள், கட்சி கொடிகள், தோர-ணங்கள், கார் கள், டூவீலர் உட்பட அனைத்து வகை வாகனங்-களில் கட்டும் கட்சி கொடி அட்டை, பிளாஸ்டிக் அட்டை அதிகம் விற்பனையாகும். தற்போது கொடி கட்டுவது, காரில் கட்-டுவதற்கு அனுமதி பெற வேண்டியுள்ளதால், அவற்றை குறைவா-கவே வாங்குகின்றனர்.அதேநேரம், வி.ஐ.பி.,க் களுக்கு வழங்கவும், பிரசாரத்துக்கு வரும் தொண்டர்கள், மக்களுக்கு வழங்கவும் கரை வேட்டிகள், கரை போடப்பட்ட துண்டுகள், மப்ளர்களை அதிக ஆர்வமாக வாங்குவர். இன்னும் இரண்டு நாட்களில் பல்வேறு மாவட்டங்-களில் இருந்தும் தேர்தல் பணிக்காக அனைத்து கட்சியினரும் வரு-வார்கள். அப்போது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்-கிறோம்.
துண்டுகள், 20 ரூபாய் முதல், 160 ரூபாய், கரை வேட்டி, 140 ரூபாய் முதல், 600 ரூபாய், மப்ளர், 110 ரூபாய் முதல், 300 ரூபாய், கட்சி கொடிகள், 20 ரூபாய் முதல் நீள அகலத்துக்கு ஏற்ப, 120 ரூபாய் வரையிலான விலையில் உள்ளன. இவ்வாறு கூறினர்.

