தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில்கள் ரத்தால் பயணிகள் ஏமாற்றம்

ரயில்கள் ரத்தால் பயணிகள் ஏமாற்றம்

ரயில்கள் ரத்தால் பயணிகள் ஏமாற்றம்


ADDED : ஜூன் 19, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மற்றும் கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு இடைப்பட்ட ஊஞ்சலூர் ரயில்வே யார்டில், ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி நடக்கிறது.

பணி மேற்கொள்ள ஏதுவாக திருச்சியில் இருந்து ஈரோட்டிற்கு தினசரி காலை, 7:25 மணிக்கு இயக்கப்படும், திருச்சி--ஈரோடு பயணிகள் ரயில்(எண்:56809) நாளை மற்றும், வரும், 22ல் திருச்சியில் இருந்து கரூர் ரயில்வே ஸ்டேஷன் வரை மட்டுமே இயக்கப்படும்.

கரூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படாது. இதேபோல், செங்கோட்டையிலிருந்து ஈரோட்டிற்கு தினசரி காலை, 5:20 மணிக்கு இயக்கப்படும் செங்கோட்டை- - ஈரோடு எக்ஸ்பிரஸ் ரயில்(எண்:16846) நாளை மற்றும் 22ல் செங்கோட்டையில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும் கரூரில் இருந்து வழக்கமான அதே நிறுத்தங்களில் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக ஈரோடு வரை இயக்கப்படும்.

ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு தினசரி மதியம், 2:00 மணிக்கு இயக்கப்படும் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்(எண்:16845) நாளை மற்றும் 22ல் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு பதிலாக கரூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதியம், 3:05 மணிக்கு புறப்படும்.

இந்த ரயில் ஈரோட்டிலிருந்து கரூர் வரை இயக்கப்படாது என்ற தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில்கள் ரத்து அறிவிப்பால், ஈரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தென் மாவட்டத்துக்கு சென்று வரும் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us