ADDED : மே 04, 2026 03:43 AM

அ நிறம் | அளவு
கோபி,: கோபி
அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் நேற்று, 250 கன அடி
தண்ணீர் வெளியேறியது. விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான
சுற்றுலா பயணிகள் வந்தனர். தடுப்பணையில் குளித்து வெப்பத்தை
தணித்தனர்.
வழக்கம்போல் அக்கரை கொடிவேரி சாலையில் நேற்றும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடத்துார் போலீசார் மற்றும் ஹைவே
பெட்ரோல் போலீசார் ஒழுங்குபடுத்தினர்.
