தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அரசு டவுன் பஸ்சை தள்ளி சென்ற பயணிகள்

அரசு டவுன் பஸ்சை தள்ளி சென்ற பயணிகள்

அரசு டவுன் பஸ்சை தள்ளி சென்ற பயணிகள்


ADDED : டிச 30, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 02:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து சிவகிரியை அடுத்த தாண்டாம்-பாளையம் செல்லும் அரசு டவுன் பஸ் (எண்-45), நேற்று மதியம் புறப்பட்டது. பஸ்சில், 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்-தனர்.

ப.செ.பார்க்கை கடந்து காந்திஜி சாலையில் எஸ்.பி., அலு-வலகம் முன் சென்றபோது திடீரென ஆப் ஆனது. டிரைவர் பல-முறை முயன்றும் ஸ்டார்ட் ஆகவில்லை. செல்ப் எடுக்காததால் வேறு வழியின்றி, பயணிகளை இறங்கி தள்ள செய்தனர். பல்-வேறு பணி முடிந்து, வீட்டுக்கு சாப்பிட செல்லலாம் என்று அமர்ந்து சென்ற பயணிகள், வாட்டி வதைக்கும் வெயிலில் பஸ்சை தள்ளி இயங்க வைத்தனர். 'இது என்ன மாடலோ?' என்று வேடிக்கை பார்த்த பலர் வருத்தத்துடன் சொல்லி சென்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us