தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அடர்ந்த வனப்பகுதியில் பழுதான அரசு பஸ்சால் தவித்த பயணிகள்

அடர்ந்த வனப்பகுதியில் பழுதான அரசு பஸ்சால் தவித்த பயணிகள்

அடர்ந்த வனப்பகுதியில் பழுதான அரசு பஸ்சால் தவித்த பயணிகள்


ADDED : அக் 15, 2024 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 15, 2024 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புளியம்பட்டி, அக். 15-

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி நீலகிரி மாவட்ட எல்லையில் தெங்குமரஹடா, அல்லிமாயார், கல்லாம்பாளையம், சித்திரம்பட்டி, புதுக்காடு உள்ளிட்ட வன கிராமங்கள் உள்ளன. இந்த வன கிராமங்களுக்கு அடர்ந்த வனப்பகுதியில், கரடு முரடான, 25 கி.மீ., வனச்சாலையில் அரசு பஸ் இயக்கப்படுகிறது.

தெங்குமரஹடா வன கிராமத்தில் இருந்து, 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன், ஒரு அரசு பஸ் கிளம்பியது. மாயாற்றின் கரையில் கல்லாம்பாளையம் அருகே சென்றபோது அடர்ந்த வனப்பகுதியில் பழுதாகி நின்றது. அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தில், 30க்கும் மேற்பட்டோர் ஏறி புறப்பட்டனர். டிரைவர், கண்டக்டரால் பழுது நீக்கப்பட்டு பஸ் கிளம்பியது. இதனால் அடர்ந்த வனப்பகுதியில், ஒரு மணி நேரம் மாணவர்கள், மக்கள் தவிப்புக்கு ஆளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us