தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஜவுளி ஏற்றுமதிக்கு வழி வகுக்கப்படும்; பா.ஜ., வேட்பாளர்

ஜவுளி ஏற்றுமதிக்கு வழி வகுக்கப்படும்; பா.ஜ., வேட்பாளர்

ஜவுளி ஏற்றுமதிக்கு வழி வகுக்கப்படும்; பா.ஜ., வேட்பாளர்


ADDED : ஏப் 15, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மேற்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் எம்.யுவராஜா நேற்று நசியனுார் டவுன் பஞ்சாயத்து, ஜெ.ஜெ.நகர், ஆயமேடு, ஆலுச்சாம்பாளையம், கணக்காடு காலனி, தயிர்பாளையம், அட்டையாம்பாளையம், சாமிக்கவுண்டன்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, ராயல் கார்டன், காரமடை, கோபாலபுரம் உட்பட பல்வேறு இடங்களில் தாமரை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது வேட்பாளர் எம்.யுவராஜா பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் கடந்த, 5 ஆண்டுகளில் சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, தண்ணீர் கட்டணம் உயர்வு, பஸ் கட்டணம், மின் கட்டணம், பால் விலை என அனைத்து விலையும் உயர்ந்துள்ளது. எங்கு பார்த்தாலும் டாஸ்மாக் கடை, பார், கஞ்சா உட்பட போதை பொருட்கள் விற்பனை நடக்கிறது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் தொல்லை, மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து என சட்டம் ஒழுங்கு மோசமாகி வருகிறது.

இதற்கு மாற்றாக அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் தாமரை சின்னத்துக்கு ஓட்டுப்

பதிவு செய்யுங்கள்.

ஒவ்வொரு பகுதியிலும் கேன்சர் கண்டறியும் முகாம் நடத்தி, பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் கண்டறியும் பரிசோதனை செய்து, கேன்சர் கண்டறியப்பட்டால், அவர்கள் சிகிச்சைக்கு வசதி செய்து தரப்படும். பெரிய தொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் கம்பெனிகள், ஜவுளி, மஞ்சள் உள்ளிட்ட உணவு பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவு பொருட்களின் ஏற்றுமதிக்கு சிறந்த திட்டம் வகுத்து தரப்படும். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தாமரை சின்னத்துக்கு ஓட்டுப்பதிவு செய்யுங்கள். இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us