/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பவருக்கு பட்டா ஹிந்து முன்னணி பொதுக்குழு கண்டனம்
/
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பவருக்கு பட்டா ஹிந்து முன்னணி பொதுக்குழு கண்டனம்
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பவருக்கு பட்டா ஹிந்து முன்னணி பொதுக்குழு கண்டனம்
கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பவருக்கு பட்டா ஹிந்து முன்னணி பொதுக்குழு கண்டனம்
ADDED : ஜன 27, 2025 02:24 AM
ஈரோடு: ஹிந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் கோட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநில பொது செயலாளர் கிஷோர் குமார், பன்னீர்தாஸ் குத்துவிளக்கு ஏற்றினர். மாநில செயலாளர்கள் செந்தில் குமார், சண்முகம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஈரோடு மாவட்ட தலைவர் ஜெகதீசன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றத்தில் முருகனின் புனித தலத்தை களங்கப்ப-டுத்தும் நபர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தைப்பூச விழாவுக்கு பாதயாத்திரையாக ஆறுபடை வீடுகளுக்கும் செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வழி-பாட்டு வசதிகளை செய்து தர வேண்டும். திருப்பூரில் நடக்கும் அரசு புத்தக திருவிழாவில், பேச்சாளர் கரு.பழனியப்பன் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து அவதுாறான விஷயங்களை பேசியுள்ளார். சிலர் வேண்டுமென்றே இந்து தெய்வங்களை, அமைப்புகளை, தேசிய அமைப்புகளை இழிவுபடுத்தி பேசி வரு-கின்றனர். இது கண்டனத்துக்குரியது. கோவில் நிலத்தை ஆக்கிர-மிப்பாளருக்கே பட்டா போட்டு கொடுத்து ஆக்கிரமிப்பாளர்-களை ஊக்குவிப்பது கண்டனத்துக்குரியது. மத்திய, மாநில அர-சுகள் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து வெளிநாட்டில் இருந்து ஊடுருவியவர்களை நாடு கடத்த வேண்டும். புழல் சிறையில் அதிகாரிகள் மீது, பயங்கரவாதிகள் நடத்திய தாக்-குலுக்கு, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில் கவிழ்ப்பு சதி திட்டத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

