/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தான்தோன்றியம்மன், பச்சைநாயகி அம்மன் கோவில்களில் பூ மிதித்து நேர்த்திக்கடன்

ADDED : டிச 27, 2024 01:02 AM
கோபி, டிச. 27-
கோபி அருகே, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 11ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக, பக்தர்கள் பூ மிதிக்கும் குண்டம் திருவிழா நேற்று நடந்தது.
காலை 7:40 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில், குண்டம் முன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் திருக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி ராஜகோபால், ஆகமவிதிப்படி குண்டம் முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம் மற்றும் பூக்களை அள்ளி வீசினார். அங்கு கூடியிருந்த பக்தர்கள் லாவகமாக பிடித்தனர். அதற்கு பின் குண்டத்தில் இருந்து நெருப்பை, இரு கைகளால் பூசாரி அள்ளி வீசி, பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை வரிசையில் நின்று, அம்மனை வணங்கியபடி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை 10:30 மணி வரை, பூ மிதித்து நேர்த்திக்கடன்
செலுத்தினர்.
* கொளப்பலுார் அருகே, அம்மன் கோவில் பதியில் உள்ள பச்சைநாயகி அம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. திருக்கொடி தீபம் ஏற்றிய பின், தலைமை பூசாரி சம்பத், பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.