ADDED : மார் 07, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில், கல்லுகுட்டைமேடு பகுதியில் தனியார் தோட்டத்து வழியாக செல்லும் மின் கம்பியில் மயில் அமர்ந்துள்ளது.
அப்போது மின்சாரம் தாக்கி பெண் மயில் ஒன்று அடிபட்டு இறந்து கிடந்துள்ளது. தோட்ட உரிமையாளர், தன்னார்வ அமைப்பை சேர்ந்த நிர்வாகியிடம் தகவல் தெரிவித்துள்ளார். மயிலை மீட்டு, வெள்ளகோவில் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

