ADDED : அக் 11, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில், ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பென்ஷன் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். எட்டாவது ஊதிய குழு உறுப்பினர்களை உடனே அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
குழு மாவட்ட செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார். மத்திய, மாநில அரசு மற்றும் பொது துறை ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பரமசிவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.