கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியதாரர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியதாரர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
தலைமை தபால் நிலையம் முன், சிவில் ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு
குழு சார்பில், மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட செயலர் சின்னசாமி, நிர்வாகிகள் பன்னீர்செல்வம், ஸ்ரீதரன், திருநாவுக்கரசு, ஜெயசங்கர், ராமசாமி உட்பட பலர் பேசினர்.
பென்ஷன்
திருத்த சட்டம்-2025ஐ மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். 2026க்கு முன்
பணி நிறைவு பெற்றவர்களுக்கும் பென்ஷன் மாற்றம் செய்திடும் வகையில், 8வது
ஊதியக்குழு பரிந்துரையை மாற்றியமைக்க வேண்டும். 50 சதவீத டீ.ஏ., -
டீ.ஆர்.,ஐ ஊதியம் அல்லது ஓய்வூதியத்துடன் சேர்க்க வேண்டும். காப்பீட்டில்
உள்ள மருத்துவ பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு
கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
கன்வீனர் பரமசிவம் நன்றி கூறினார்
