/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம்
/
அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம்
அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம்
அதிவேகமாக சென்ற தனியார் பஸ் சிறைபிடித்து மக்கள் வாக்குவாதம்
ADDED : அக் 14, 2025 02:24 AM
ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து பவானிக்கு, 35-ஏ தனியார் டவுன் பஸ், நேற்று காலை, 11:30 மணியளவில் புறப்பட்டது. பவானி ரோடு லட்சுமி தியேட்டர் அருகில், பஸ்சை மக்கள் சிறைபிடித்து டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், 20 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
பவானி ரோட்டில் வாகன போக்குவரத்து எப்போதும் அதிகமாக காணப்படும். திங்கட்கிழமை என்பதால் அசோகபுரம் ஜவுளி வாரச்சந்தைக்கு அதிக மக்கள் வந்துள்ளனர். இதனால் வழக்கத்தைவிட அதிக கூட்டம் ரோட்டில் இருந்தது. தனியார் பஸ் ஹாரன் அடித்தபடி அதி வேகத்தில் வந்தது. இதனால் பாதசாரிகள், மற்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து பஸ்ஸை துரத்தி வந்து சிறைபிடித்தோம். இனி வேகமாக செல்லமாட்டோம் என, டிரைவர்-கண்டக்டர் கூறியதால் எச்சரித்து அனுப்பினோம். இவ்வாறு கூறினர்.