ADDED : செப் 01, 2026 05:23 AM
சத்தியமங்கலம்; தாளவாடி அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தாளவாடி மலையில் உள்ள திகினாரை பஞ்.,க்கு உட்பட்ட ஏரஹனள்ளி கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகு-தியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் சில நாட்களாக குடி நீர் வரவில்லை.
இதனால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் அருகி-லுள்ள தோட்டங்களில் சென்று குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். பஞ்., நிர்வாகத்திடம் பல-முறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பெண்கள், 200பேர் பனகள்ளி சாலையில் நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.தாளவாடி பி.டி.ஓ., மஞ்சுநாதன், தாசில்தார் சர-வணன் ஆகியோர், மறியலில் ஈடுபட்ட மக்க-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டேங்கர் லாரி மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்-படும் என கூறியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
மறியலால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
