/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதி பெறாமல் மண் அள்ளிய லாரியை சிறைபிடித்த மக்கள்
/
அனுமதி பெறாமல் மண் அள்ளிய லாரியை சிறைபிடித்த மக்கள்
அனுமதி பெறாமல் மண் அள்ளிய லாரியை சிறைபிடித்த மக்கள்
அனுமதி பெறாமல் மண் அள்ளிய லாரியை சிறைபிடித்த மக்கள்
ADDED : நவ 21, 2025 01:23 AM
காங்கேயம், காங்கேயம் தாலுகா ஊதியூர் ஆறுதொழுவு பஞ்., காளிபாளையம் பகுதியில், தனியார் இடத்தில் நேற்று காலை சட்டவிரோதமாக சிலர் மண் அள்ளினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், மண் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்தனர்.
போலீசார், வருவாய் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சரோஜா, ஆறுதொழுவு வி.ஏ.ஓ., கார்த்திகேயன் ஆகியோர், லாரியை சோதனை செய்ததில் உரிய அனுமதி பெறாதது தெரிய வந்தது.
லாரியில் இருந்த மண்ணை மீண்டும் எடுத்த பகுதியில் கொட்டுமாறு அறிவுறுத்தினர். இடத்தின் உரிமையாளர் மீது ஏற்கனவே மண் அள்ளிய வழக்கு, மாவட்ட கனிமம் தனி
வருவாய் (புவியியல்) மற்றும் சுரங்க துறையில் நிலுவையில் உள்ளது. இதற்கு நிலம் அளவீடு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட உள்ள நிலையில், தற்போது மண் அள்ளியதற்கும் கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என வருவாய் துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.