/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழிவுநீர் கலந்து குடிநீர் வினியோகம்தாளவாடியில் மக்கள் தாளாத அதிர்ச்சி
/
கழிவுநீர் கலந்து குடிநீர் வினியோகம்தாளவாடியில் மக்கள் தாளாத அதிர்ச்சி
கழிவுநீர் கலந்து குடிநீர் வினியோகம்தாளவாடியில் மக்கள் தாளாத அதிர்ச்சி
கழிவுநீர் கலந்து குடிநீர் வினியோகம்தாளவாடியில் மக்கள் தாளாத அதிர்ச்சி
ADDED : அக் 11, 2025 12:47 AM
சத்தியமங்கலம், தாளவாடிமலையில் உள்ள தாளவாடி ஊராட்சி இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட மேசன் வீதியில், 25க்கும் மேற்பட்ட வீடுளில் நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஊராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக பதிக்கப்பட்டுள்ள குழாயில், குடிநீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது. கடந்த, 20 நாட்களாக இது தெரியாமல் குடித்த மக்கள், தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு காய்ச்சல், இருமல், பேதி உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊராட்சி அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக இதுகுறித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அப்பகுதி மக்களின் வேதனையாக உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மழை பெய்து வருவதால் மழைநீர் கலந்து வருவதாக நினைத்து விட்டோம். பலர் உடல்நலம் சரியின்றி தனியார் மருத்துவமனைக்கு சென்றபோதுதான் சந்தேகம் வந்தது. குழாயில் வரும் நீரை பாட்டிலில் பிடித்து பார்த்தபோது முதலில் கருமை நிறத்தில் சாக்கடை தண்ணீர் கலந்த நீர் வருவது தெரிய வந்தது. எங்கள் பகுதியில் சாக்கடை வசதி, 10 ஆண்டுகளாக செய்து தரப்படவில்லை. வீடுகளில் பாத்திரங்கள் கழுவும் நீரை பக்கெட்டுகளில் பிடித்து இரவில் ஊருக்கு வெளியே ஊற்றி வருகிறோம். சாக்கடை வசதியும் செய்து தர வேண்டும். ஊராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார அலுவலர்கள், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் கூறினர்.