வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தையால் மக்கள் பீதி
வளர்ப்பு நாயை கவ்வி சென்ற சிறுத்தையால் மக்கள் பீதி
ADDED : ஜூன் 20, 2026 05:47 AM
புளியம்பட்டி:மலைக்குன்றில் முகாமிட்டுள்ள சிறுத்தை, வளர்ப்பு நாயை கவ்விச் சென்றதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
விளாமுண்டி
வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு சிறுத்தைகள்
புன்செய்புளியம்பட்டி அருகே மாராயிபாளையம் மலைக்குன்றில்
பதுங்கியது. இதில் ஒரு சிறுத்தை பிடிபட்ட நிலையில், மற்றொன்று
சிக்கவில்லை. சில நாட்களுக்கு முன், பெரியகள்ளிப்பட்டி அருகே
ஓதிமலை பின்புறம் மலைக்குன்றில் சிறுத்தை நடமாடியது. இந்நிலையில்
நேற்று காலை மலைக்குன்று அடிவாரத்துக்கு வந்த சிறுத்தை, குமார்
என்பவரது தோட்டத்தில் புகுந்து, கண்ணிமைக்கும் நேரத்தில் வளர்ப்பு
நாயை கவ்விக்கொண்டு மலைக்குன்றின் உச்சிக்கு சென்றுள்ளது.
இதை
நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், வனத்துறைக்கு தகவல்
தெரிவித்தார். சிறுத்தை பிடிபடாத நிலையில், அவ்வப்போது கால்நடை,
வளர்ப்பு நாயை கொல்வதால், மக்களின் பீதி அதிகரித்துள்ளது.
