ADDED : மே 15, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:பவானி
அருகே புன்னம் ஊராட்சி, ஏழாவது வார்டுக்கு உட்பட்ட புன்னம் காலனியில்,
இரண்டு மாதங்களாக சீரான குடிநீர் வினியோகமின்றி, மக்கள்
அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்
சங்க பவானி தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் இந்திராணி, செல்லம்மா
தலைமையில் திரண்ட, 25-க்கும் மேற்பட்ட பெண்கள், பவானி யூனியன்
அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தனர்.
அப்பகுதியில் உள்ள
போர்வெல்லை பராமரித்து, தண்ணீர் இருந்தால் மேலும் இரு குழாய்களை இறக்கி
தண்ணீர் எடுத்து வினியோகிக்கப்படும். அதுவரை வாகனம் மூலம் குடிநீர்
வினியோகிப்பதாக, யூனியன் அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

