/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொளத்துபாளையத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
/
கொளத்துபாளையத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 22, 2025 02:03 AM
தாராபுரம் தாராபுரத்தை அடுத்த கொளத்துபாளையத்தில் செயல்பட்ட, ஈரோடு மாவட்ட கூட்டுறவு நுாற்பாலை, 30 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.
இந்த ஆலை செயல்பட்டு வந்த இடத்தில், சிப்காட் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான நிலம் என்ற அறிவிப்பை ஒட்டியது. இது தாராபுரம் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் சிப்காட்டை அமைத்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டாம் என கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையி, நுாற்பாலை முன், நுாற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை திரண்டனர். சட்டைகளில் கருப்பு பட்டை அணிந்து, சிப்காட் நிறுவனம் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் இயற்கை விவசாயி பெரியசாமி, விதை உற்பத்தியாளர் சிவக்குமார், பா.ஜ.,  கவுன்சிலர் கார்த்திகேயன் சண்முக ஆனந்த் உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.

