/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு இரவில் மறியலில் ஈடுபட்ட மக்கள்
/
சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு இரவில் மறியலில் ஈடுபட்ட மக்கள்
சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு இரவில் மறியலில் ஈடுபட்ட மக்கள்
சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு இரவில் மறியலில் ஈடுபட்ட மக்கள்
ADDED : மே 25, 2025 01:24 AM
பவானி ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை அடுத்த குருவரெட்டியூர் பஞ்., பெரியார் நகரில், 150-கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் இறந்தவர்களின் உடலை புதைக்க, 2 கி.மீ., தொலைவில் உள்ள கல்லாங்காடுகாட்டுகொட்டாய் பகுதி சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும். சுடுகாட்டுக்கு செல்ல முறையான பாதை இல்லை. இப்பகுதியை சேர்ந்த ஜெயசீலன், 33, உடல்நல குறைவால் நேற்று உயிரிழந்தார். உடலை புதைக்க உறவினர்கள் மற்றும் மக்கள் சென்றனர். வயல் வரப்பு வழியாக சென்றபோது பலர் தவறி விழுந்து காயமடைந்தனர். பல்வேறு சிரமத்துக்கிடையே உடலை அடக்கம் செய்து, வீடு திரும்பினர்.
சுடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு பல முறை அதிகாரிகளிடத்தில் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ௩0க்கும் மேற்பட்டோர் கொட்டும் மழையில் நனைந்தபடி, குருவரெட்டியூர்-வெள்ளிதிருப்பூர் சாலையில், பெரியார் நகர் பஸ் நிறுத்தத்தில் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வந்த அரசு பஸ்ஸை சிறைபிடித்தனர். அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் கவிதா, குருவரெட்டியூர் ஊராட்சி செயலாளர் அர்த்தனாரி மற்றும் வருவாய் அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தினர். உயரதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறவே, மறியலை கைவிட்டனர். இதனால், ௩௦ நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

