ADDED : செப் 11, 2026 06:36 AM
ஈரோடு;ஈரோடு
மாநகராட்சி, 35வது வார்டு தில்லை நகர் ரோட்டில் பள்ளிகள் உட்பட
ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதிக்கு அருகில் ஆருத்ரகபாலீஸ்வரர், கஸ்துார் அரங்கநாதர் கோவில், கோட்டை பத்ரகாளியம்மன் கோவில், சவுடேஸ்வரி அம்மன் கோவில்கள் உள்ளன.
இதனால்
அப்பகுதி வழியாக பக்தர்கள் உட்பட, ஏராளமானோர் சென்று
வருகின்றனர். இந்நிலையில் தெப்பக்குளத்திற்கு எதிரே செல்லும், சாலை
ஓரத்தில் உள்ள சாக்கடை துார்வாரப்பட்டது. பின்னர் அதிலிருந்த
கழிவுகளை முறையாக அகற்றாமல், சாலையோரமாக வரிசையாக தேக்கி
வைக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த நான்கு நாட்களாக, அப்பகுதியில்
சுகாதார சீர்கேடு நிலவுவதாக அப்பகுதி மக்கள் புகார்
தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே குறுகலாக உள்ள சாலையை, சாக்கடை
கழிவுகள் ஆக்கிரமித்து கிடப்பதால் போக்குவரத்து பாதிப்பு
ஏற்படுவதால், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
