/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
/
நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் அவதி
ADDED : மார் 04, 2024 07:27 AM
ஈரோடு ஈரோட்டில் ஸ்டேட் பாங்க் சாலையின் இருபுறமும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சில ஆண்டுக்கு முன் டைல்ஸ் கற்கள் பதித்த நடைபாதை அமைக்கப்பட்டது. தற்போது நடைபாதையை கடைக்காரர்களால் முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இதை அகற்ற மாநகராட்சி முன் வர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள், மக்கள் கூறியதாவது: ஈரோடு கடை வீதிக்கு செல்ல மாற்று பாதையாக ஸ்டேட் பாங்க் சாலை உள்ளது. ஆனால், நடைபாதையை கடைக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளதால் பாதசாரிகள், சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது. பாதசாரிகள் சாலைக்கு வருவதால் வாகனத்தில் சீரான வேகத்தில் செல்ல முடிவதில்லை. மேலும் சாலையின் இருபுறங்களிலும் கடைக்காரர்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின், வேலை செய்வோரின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், சாலை மேலும் குறுகலாகிறது. இதனால் காலை, மாலை நேரங்களில் சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ஜவுளி சந்தை நடக்கும் செவ்வாய் கிழமைகளில் வாகன ஓட்டிகள், மக்கள் மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

