ADDED : அக் 07, 2024 03:28 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை: சென்னிமலை அருகே, பால் வடிந்த வேப்பமரத்தை, நுாற்றுக்கணக்கான மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
சென்னிமலை அருகே திருநகரில் இருந்து ஓட்டப்பாறை செல்லும் வழியில், கருப்பணங்கோவில் பள்ளம் பகுதியில், குருக்கல்பாளையம் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு வேப்பமரம் உள்ளது.
இதில் நேற்று மதியம் பால் போன்ற திரவம் வடிந்தது. இதுகுறித்த தகவல் பரவியதால் மக்கள் திரண்டு சென்று மரத்தை பார்த்தனர். மரத்தின் அடிப்பகுதியில் மஞ்சள், குங்குமம், சந்தனம் பூசினர். பிறகு மாலை அணிவித்து ஊதுவத்தி கொளுத்தி, கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
