/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடிப்படை வசதி கோரி டவுன் பஞ்., மக்கள் மனு
/
அடிப்படை வசதி கோரி டவுன் பஞ்., மக்கள் மனு
ADDED : டிச 24, 2024 02:13 AM
ஈரோடு, டிச. 24-
நசியனுார் டவுன் பஞ்., பகுதியினர், அடிப்படை வசதி செய்து தரக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். வேட்டுவபாளையம், அம்மன் நகரை சேர்ந்த சரோஜா தலைமையில் மக்கள் வழங்கிய மனுவில் கூறியதாவது:
வேட்டுவபாளையம், அம்மன் நகர், வார்டு எண்- 7 ல், 13 ஆண்டுகளாக வசிக்கிறோம். டவுன் பஞ்.,க்கு வரி செலுத்தி வருகிறோம். இருந்தும் இப்பகுதியில் இதுவரை அடிப்படை வசதி
களான சாலை, குடிநீர், கழிவு நீர் ஓடை, மின்சார வசதி செய்து தரவில்லை. முறையாக மனு வழங்கியும், டவுன் பஞ்., செயல் அலுவலர் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்ளனர்.