ADDED : மே 09, 2026 03:51 AM

ஈரோடு: பெருந்துறை ஆர்.எஸ்.கிரீன் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் -2 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி தனிஷ்கா, 597 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் சிறப்பிடம், ஈரோடு மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவி மிருதுளா, 592 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம், மாணவி பிரணவி, 591 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். பிளஸ்- 2 தேர்வெழுதிய, 147 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
590க்கு மேல் மூன்று பேரும், 580க்கு மேல் எட்டு பேரும், 550க்கு மேல் 28 பேரும், 500க்கு மேல் 81 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நான்கு பாடங்களில் ஒரு மாணவியும், மூன்று பாடங்களில் ஒரு மாணவியும், இரண்டு பாடங்களில் ஒரு மாணவியும் ஒரு பாடத்தில், 15 மாணவர்களும் முழு மதிப்பெண் பெற்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் உறுதுணையாக இருந்த பள்ளி ஆசிரியர்களை, பள்ளி தலைவர் குருவாயூரப்பன், தாளாளர் ஜெரோம், செயலாளர் நாகராஜ் மற்றும் இயக்குனர்கள் பாராட்டி வாழ்த்தினர்.
