தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு தெரிவித்து மனு

கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு தெரிவித்து மனு

கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் எதிர்ப்பு தெரிவித்து மனு


ADDED : பிப் 12, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: நம்பியூர் தாலுகா, எலத்துார் டவுன் பஞ்சாயத்து, அஞ்சானுார், கூடக்கரை மற்றும் ஆண்டிபாளையம் பஞ்., பகுதியை சேர்ந்த, 30 பேர், எலத்துார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பிரபாக-ரிடம் மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: நம்பியூர் தாலுகாவுக்கு உட்பட்ட எலத்துார் டவுன் பஞ்சாயத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ஏற்கனவே அஞ்சானுார், ஆண்-டிபாளையம், கூடக்கரை பஞ்சாயத்து மற்றும் எலத்துார் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எலத்துார் டவுன் பஞ்சாயத்தில் பணி துவங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்-ளது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைவதால், ஏற்கனவே அங்-குள்ள, 400 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு பகு-தியும், விவசாய நிலங்களும், ஆழ்குழாய் கிணறுகளும், மாசு ஏற்-பட வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே அனைத்து துறை அதிகாரிக-ளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மனு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அங்கு பணி துவங்காமல், வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us