ADDED : ஜூலை 24, 2024 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி : பவானிசாகர் யூனியன் பனையம்பள்ளி ஊராட்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், அடுக்கு-மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
இங்கு, 108 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் குடிநீர் வசதி செய்து தரக்கோரி, குமரன் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், செயலாளர் தர்-மராசு தலைமையில், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவல-ரிடம் மனு வழங்கினர். மனுவில் கூறியிருப்பதாவது: இங்கு இரண்டாண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் நிலையில், குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனால் பல கிலோ மீட்டர் சென்று குடிநீர் கொண்டு வர வேண்டி உள்ளது. இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.