/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி விவசாயிகள் பாதுகாப்பு கோரி மனு
/
கீழ்பவானி விவசாயிகள் பாதுகாப்பு கோரி மனு
ADDED : ஏப் 27, 2024 07:04 AM
ஈரோடு : கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று மனு வழங்கினர்.இதுகுறித்து நிர்வாகி பெரியசாமி கூறியதாவது: கீழ்பவானி பாசனத்தில் ஐந்தாம் நனைப்புக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, அரசாணை பெற்றோம்.
ஆனால் மழைஇன்மை, பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து இல்லாததால், தண்ணீர் திறக்க வழியில்லை என்று நீர் வளத்துறையினர் விளக்கினர். அரசு, நீர் வளத்துறைக்கு உள்ள நெருக்கடியை அறிக்கையாக மக்களிடம் தெரிவித்தோம். இதை சிலர் கொச்சைப்படுத்தி, எங்களது கூட்டமைப்பு அலுவலகத்துக்கு விளக்கம் கேட்டு வருவதாக அறிக்கை விடுத்துள்ளனர். ஈரோட்டில் மேட்டூர் சாலை அருகே உள்ள கூட்டமைப்பு அலுவலகத்துக்கு பிரச்னை செய்ய வருவோரை தடுத்து, பாதுகாப்பு வழங்க மனு தந்துள்ளோம். இவ்வாறு கூறினார்.

