ADDED : அக் 07, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
மாநகராட்சியில் பணிபுரியும் கொசு ஒழிப்பு பணியாளர்கள், கூலி உயர்வு
கேட்டு ஆணையர் அர்பித் ஜெயினிடம் நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து
அவர்கள் கூறியதாவது: மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணியில்
ஈடுபட்டுள்ள எங்களுக்கு தினசரி ஊதியமாக, 370 ரூபாய் ஊதியம்
நிர்ணயித்துள்ளனர். இதில் பி.எப்., பிடித்தம் போக, 307 ரூபாய் வங்கி
மூலம் கிடைக்கிறது. காலை, 6:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை பணி
நேரமாக உள்ளது. ஆனால் பல்வேறு அரசு பணிகளில் மாலை வரை
ஈடுபடுத்துகின்றனர்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கூலியை
உயர்த்தவில்லை. மதுரை, தேனி மாவட்டங்களை போல் தினசரி கூலியை, 690
ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
