/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அடிப்படை கூலி உயர்வு கோரி மனு
/
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அடிப்படை கூலி உயர்வு கோரி மனு
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அடிப்படை கூலி உயர்வு கோரி மனு
கறிக்கோழி பண்ணை விவசாயிகள் அடிப்படை கூலி உயர்வு கோரி மனு
ADDED : பிப் 10, 2026 08:45 AM
ஈரோடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், மாவட்ட செயலர் நடராஜன் தலைமையில், பல்வேறு அமைப்புகள் சார்பில், ஈரோடு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் நேற்று மனு வழங்கி கூறியதாவது: கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு உரிய கூலி உயர்வாக, ஒரு கிலோவுக்கு, 6.50 ரூபாயில் இருந்து, 20 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்காக போராடிய விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். கரும்பு டன்னுக்கு, 5,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 4,000 ரூபாய், மஞ்சள் குவிண்டாலுக்கு, 25,000 ரூபாய், மரவள்ளி கிழங்கு டன்னுக்கு, 15,000 ரூபாய், மக்காசோளம் குவிண்டாலுக்கு, 4,000 ரூபாய் என விளை பொருட்கள், பாலுக்கான தொகையை உயர்த்தி அறிவித்து வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.